தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஆதார் கார்டு மூலம் ரூ.20,000 எடுக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்

x





தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை விரைவில் மைக்ரோ ஏ.டி.எம். களாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவிநியோக திட்ட பொருட்களை விநியோகம் செய்வதும், பண பரிவர்த்தனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படும் 3 ஆயிரத்து 500 கூட்டுறவு சங்கங்களில் பணம் செலுத்தும் நடைமுறைகள் இருந்து வருகின்றன. சில சங்கங்களில் பணம் எடுக்கும் நடைமுறைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று, கூட்டுறவுத் துறைகள் சார்பில் இயங்கும் 34ஆயிரத்து 567 ரேஷன் கடை களிலும் 'மைக்ரோ' ஏ.டி.எம். வசதி கொண்டுவரப்பட உள்ளது. ரேஷன் கடைகள் அனைத்திலும் பொதுமக்கள் ஆதார் அட்டை வாயிலாக தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளும் வசதி நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதற்காக பீ.ஓ.எஸ் கையடக்க கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்களிடம் ரொக்கப்பணம் முன்பே வழங்கப்பட்டு விடும். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்