விளையாட்டு திருவிழா - 02.01.2019 வடசென்னையின் வீரமங்கை - இந்தியாவின் தங்க மங்கை
விளையாட்டு திருவிழா - 02.01.2019 கும்ப்ளே உருவாக்கியுள்ள புதிய கிரிக்கெட் தொழில்நுட்பம்
வடசென்னையின் வீரமங்கை - இந்தியாவின் தங்க மங்கை :
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆனந் சுந்தரராமன் - ரமணி தம்பதியரின் மூத்த மகள் பவானி தேவி. இவர் 2004 ஆம் ஆண்டு தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது, வாள் சண்டை சதுரங்கம் கேரம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றார். அதற்கான பயிற்சிகளும் பெற்றார். ஆரம்பத்தில் மாணவிகள் யாரும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்ததால் பவானி தேவி மட்டும் வாள் சண்டை பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறவேண்டும் என்பதால் பள்ளியில் இருந்து தினமும் பயிற்சிக்கு அழைத்து செல்ல சிரமப்பட்ட உடற்கல்வி ஆசிரியை பெண்களுக்கு வாள் சண்டை தேவையில்லாதது என ஏதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், பாதியிலேயே பயிற்சியை கைவிடும் நிலை ஏற்பட்டது. ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த பவானி தேவிக்கு அது வேதனை அளித்தது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பவானிதேவிக்கு, அவரது தாய் உறுதுணையாக இருந்துள்ளார். பல்வேறு சிரமங்களைக் கடந்து தீவிர பயிற்சி பெற்று போட்டிகளில் பதக்கங்களை வென்றார். தமிழக அளவில் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவில் சிறந்த வீராங்கணை என்று பெயர் எடுத்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், வறுமையின் காரணமாக, உதவிகேட்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருந்தார். மனுவை பரிசீலித்த ஜெயலலிதா அன்று மாலையே பவானிதேவிக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து வெளிநாட்டில் நடைபெற்ற பல்வேறு வாள்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை குவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வாள் சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது, தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருகிறார் இவர்.
கும்ப்ளே உருவாக்கியுள்ள புதிய கிரிக்கெட் தொழில்நுட்பம் :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (Anil Kumble) கண்டறிந்துள்ள அறிவியல் தொழில்நுட்ப கிரிக்கெட் மட்டை .
ஹோப்மேன் கப் - முதல் முறையாக மோதிய பெடரர் , செரீனா
1973 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டி இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, பெடரர் அமெரிக்க வீரர் டியாஃபோவையும், செரீனா, கிரீஸ் வீராங்கணை மரீயா சக்காரியை வீழ்த்தினர். அதன் பின் பெடரர் , பிளிண்டா பென்சிக் ஜோடி, செரீனா டியாஃபோ ஜோடியுடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பெடரர் மற்றும் பிளிண்டா ஜோடி, 4-2 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெடரர் ரசிகர்களும், செரீனா ரசிகர்களும் போட்டி போட்டு உற்சாகப்படுத்தியதால், போட்டி, ஆரம்பம் முதல் இறுதி வரை, ஆடுகளம் கரவொலியால் அதிர்ந்தது. இறுதியில், செரீனாவும், பெடரரும் செல்பி எடுத்துகொண்டு புன்னகையுடன் விடை பெற்றனர்.
Next Story