விளையாட்டு திருவிழா - 20.12.2018 : ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்
விளையாட்டு திருவிழா - 20.12.2018 : தண்ணீரில் விளையாடப்படும் கால்பந்து ஆட்டம்
விளையாட்டு திருவிழா - 20.12.2018
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பெர்த் டெஸ்ட்டில் சதம் விளாசியதன் மூலம் 14 புள்ளிகள் அதிகரித்து 934 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். 915 புள்ளிகளுடன் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 2வது இடத்தில் உள்ளார். 816 புள்ளிகளுடன் இந்திய வீரர் புஜாரா 4வது இடத்தை பிடித்துள்ளார். ரஹானே மூன்று இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், ரிஷப் பண்ட் 11 இடங்கள் முன்னேறி 48வது இடத்தையும் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். பும்ரா 5 இடங்கள் முன்னேறி 28வது இடத்தை பிடித்துள்ளார். 6 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது ஷமி 2 இடங்கள் முன்னேறி 21வது இடத்தையும், இஷாந்த் சர்மா 26வது இடத்தையும் பிடித்துள்ளார்.
தண்ணீரில் விளையாடப்படும் கால்பந்து ஆட்டம்
இந்த விளையாட்டு பிறந்த இடம் FINLAND..!! ஆரம்ப காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவே இந்தப் போட்டி உருவானது. சேற்றில் இறங்கி நடப்பதே கஷ்டம்.. ஆனால் சேற்றில் ஓடுவது, பாய்ந்து விளையாடுவது, வீரர்களின் வலிமையை கடுமையாக சோதிக்கும். இந்தப் போட்டி எவ்வளவு கடினமோ.. அதே அளவுக்கு வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். வீரர்கள் சேற்றில் விளையாடுவது, சகதியை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்வது என ஆடுகளமே அட்காசமாக இருக்கும். கால்பந்தின் விதிகளை போலவே இந்தப் போட்டி இருந்தாலும், ஒரு அணிக்கு 5 பேர் தான்.. சேற்றால் காலணிகள் பாதிக்கப்பட்டாலும், போட்டிக்கு நடுவில் ஷூவை மாற்ற கூடாது. இது தான் இந்தப் போட்டியின் முக்கிய விதி. SWAMP SOCCER க்கு என உலகக் கோப்பை போட்டியே நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை ஆண்களை விட பெண்களே அதிகளவில் விரும்பி விளையாடுகின்றனர். இந்தப் போட்டி மழை கொட்டினாலும் தடைப்படாது.
தடைகளை தாண்டும் வினோத பந்தயம்
EXTREME WINTER OBSTACLE RACE 2.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பந்தயத்தில் போட்டியாளர்கள் 15 தடைகளை கடக்க வேண்டும். சாதாரணமாக பனி படர்ந்த பாதையில் ஓடும் வீரர்கள், பின்னர் ஐஸ் கட்டியை தோளில் சுமந்து சென்று ஓட வேண்டும். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான தடைகளை வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடக்க வேண்டும். பின் மரக்கட்டையான தடுப்பு சுவரில் எறி குதித்து செல்லும் வீரர்கள், கயிற்றின் உதவியுடன் மலையேற வேண்டும். இதனைத் தொடர்ந்து கம்பிகளுக்குள் நுழைந்து, படுத்து, வேகமாக வீரர்கள் முன்னேறி தடையை கடக்க வேண்டும். பின் மாடி பாடியில் ஏறும் வீரர்கள், மீண்டும் ஓடி போட்டியை முடிக்க வேண்டும். இதில் ஆடவர் பிரிவில் ஜெர்மனி வீரர் Christoph Birkner ம், மகளிர் பிரிவில் NICOLE MERICLEம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். வீரர்கள் உடல் வலிமை, மன வலிமை ஆகியவற்றை சோதிக்கும் இந்த போட்டி கூறும் பாடம்.. தடைகளை கடந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.
400 மீ. ரிலே போட்டியை இப்படியும் விளையாடலாம்!
போட்டி தொடங்கியதும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மேடான பாதையை நோக்கி ஓடினர். கால்களில் பனிச்சறுக்கு பலகையை கொண்டு மேட்டை நோக்கி ஓடும் வீரர்கள், அங்கு மலை உச்சியில் தயாராக நிற்கும் தங்களது அணி வீரர்களிடம் பேட்டனை வழங்கினர். அவர்கள், மலை உச்சியிலிருந்து பாராசூட் முலம் பறந்து செல்ல, தரையில் தொடங்கிய போட்டி, ஆகாயத்திற்கு மாறியது. பாராசூட்டிலிருந்து கீழே இறங்கும் வீரர்கள், சைக்கிளில் தயாராக நிற்கும் தங்களது அணி வீரர்களிடம் பட்டனை வழங்க, அவர்கள் சைக்கிளில் சீறி சென்றார்கள். சைக்கிள் பந்தயத்தை முடிக்கும் வீரர்கள், பனிச்சறுக்குக்கு தயாராக நிற்கும் தங்களது அணி வீரர்களிடம் பேட்டனை வழங்க, அவர்கள் சாய்ல்வான பாதையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு பந்தயம் தொடங்கிய இடத்திற்கே முடித்தனர். இந்த பந்தயத்தை 39 நிமிடங்கள் 7 புள்ளி 2 விநாடிகளில் நிறைவு செய்த RED BULL அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை குறிக்கும் வகையில் இந்த வினோத போட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர், நிலப் பரப்பு ஆகியவை வீரர்களுக்கு சவால்களை கொடுத்தாலும், அதனை எதிர்கொண்டு மீண்டு வருவதே இந்தப் போட்டியாகும்.
Next Story