விளையாட்டு திருவிழா - 26.09.2018
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின ஆட்டம் ரசிகர்களை சீட்டு இருக்கையின் நுணிக்கு கொண்டு சென்றது
ரோஹித், தவான், பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து தோனி, அணியின் கேப்டனாக திரும்பினார்,
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ஷாசாத் மட்டும் கதகளி ஆட மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், அதை பற்றி கவலையில்லாமல் விளையாடினார் ஷாசாத். இதனால் அவர் சதம் விளாசினார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, 64 ரன்கள் விளாச ஆப்கானிஸ்தான் அணி 252 ரன்கள் குவித்தது.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராயுடு, கே.எல். ராகுல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ராயுடு 57 ரன்களில் வெளியேற, கே.எல். ராகுல் 60 ரன்கள் எடுத்து இருக்கும் போது டி ஆர் எஸ் வாய்ப்பை வீணாக்கிவிட்டு பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் தோனி 8 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் எடுத்திருக்கும் போது நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தது. இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கேதர் ஜாதவும் ரன் அவுட்டாக, இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடியது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜடேஜா அடித்த பந்து சிக்ஸ் லைன் கொட்டில் விழுந்தது. ஆனால் அது நான்கு ரன்களாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2 பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது ஜடேஜா ஆட்டமிழக்க போட்டி சமனில் முடிந்தது.
வாழ்வா? சாவா? ஆட்டத்தில் பாக். Vs வங்க. மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் வங்கதேசமும், பாகிஸ்தானும் விளையாடி வருகின்றன.
இந்தியாவிடம் மோசமாக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, வீறுகொண்டு எழ வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் இருந்தும், அவர்கள் நடப்பு தொடரில் சொதப்பி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் உத்திகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷாயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தாத அமீர், நீக்கப்பட்டு, ஜூனைத் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணியோ, பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது.
இம்ருல் கயேஸ், முகமுதுல்லா, ரஹ்மான் ஆகியோர் பார்ம்க்கு திரும்பியது வங்கதேசத்துக்கு சாதகமாக கருதப்படுகிறது. இருந்தும் ஆல் ரவுண்டர் ஷகிபுல் ஹசன் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளது, வங்கதேசத்துக்கு குறையாகவே பார்க்கப்படுகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டியில் வங்கதேசம் 3 போட்டிகளிலும், பாகிஸ்தான் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
Next Story