விளையாட்டு திருவிழா - 24.09.2018

பாக். பந்துவீச்சை தெறிக்கவிட்ட இந்தியா தவான், ரோஹித் அபார சதம் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி
விளையாட்டு திருவிழா - 24.09.2018
x
பாக். பந்துவீச்சை தெறிக்கவிட்ட இந்தியா தவான், ரோஹித் அபார சதம் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.  துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 10 ரன்களிலும் அதிரடியாக ஆட முற்பட்ட FAKAR ZAMAN 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இளம் வீரர் பாபர் ரன் அவுட்டாக பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது. இதனையடுத்து, கேப்டன் சர்பிராஸ் கான், சாயிப் மாலிக் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மிட்டது. அதிரடியாக விளையாடிய சர்பிராஸ் கான் 44 ரன்கள் எடுத்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  பொறுப்புடன் விளையாடி சாயிப் மாலிக் 78 ரன்களில் வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த எளிய கேட்சை பாகிஸ்தான் வீரர்கள் 2 முறை நழுவ விட்டனர். பாகிஸ்தானின் மோசமான ஃபில்டிங்கை பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் அடுத்தடுத்து சதம் விளாச தவான் 114 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி 39 புள்ளி 3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 7 ஆயிரம் ரன்களை கடந்தார். 

திரில் வெற்றி பெற்ற வங்கதேசம் - வங்கதேசத்தை அலறவிட்ட ஆப்கான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. வங்கதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறியது.  அப்போது முகமுதுல்லா, இம்ருல்லா கயிஸ் ஜோடி அரைசதம் விளாச வங்கதேசம் 249 ரன்களை எட்டியது.

இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். தொடக்கத்தில் தடுமாறிய வங்கதேச அணி, ஆட்டத்தின் பிற்பாதியில் அதிரடியை காட்டியது.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆபாரமாக பந்துவீச, 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணி தோல்வியை தழுவியது. 


Next Story

மேலும் செய்திகள்