விளையாட்டு திருவிழா - 20.09.2018 - பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி
விளையாட்டு திருவிழா - 20.09.2018 - கேல் ரத்னா விருதை வென்றார் கோலி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சிதறடிக்கப்போகிறது என காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடக்க ஆட்டக்காரர் IMAM UL HAQ, FAKHAR ZAMAN ஆகிய அதிரடி வீரர்களின் விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். பாபர் அசாம், ஷாயிப் மாலிக் ஆகியர் பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஆனால், மாலிக் ரன் அவுட்டாக, கேப்டன் சர்பிராஸ் அகமது, மணிஷ் பாண்டேவின் அசத்தலான கேட்சால் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வீரர்களுக்கு குடச்சல் அளிக்கும் விதமாக பந்துவீசிய கேதர் ஜாதவ் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு சுருண்டது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். பொறுப்புடன் ஆடிய தவானும், 46 ரன்கள் எடுத்து வெளியேற, ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் பொறுப்புடன் ரன்களை சேர்த்து 29வது ஓவரிலே வெற்ற இலக்கை எட்டினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப்போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவரை ஸ்ட்ரேச்சரில் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது.
கேல் ரத்னா விருதை வென்றார் கோலி
விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி , பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும், வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கி கவுரவிக்கும். இந்நிலையில், சச்சின், தோனிக்கு பிறகு கேல் ரத்னா விருதை பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மீரா பாய் சானும் கேல் ரத்னா விருதை வென்றுள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் னசேகரன், அர்ஜூனா விருதை வென்றுள்ளார். டேபிள் டெனனிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங், டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ், பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி ஆகியோரும் அர்ஜூனா விருதை வென்றுள்ளனர். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது, குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேந்தர் குட்டப்பா , பளுதூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கடைசி லீக் ஆட்டம் - வெல்லப்போவது யார் ஆப்கானா? வங்கதேசமா?
ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசமும், ஆப்கானிஸ்தானும் தற்போது விளையாடி வருகிறது. சமீப காலமாக இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இரு அணி வீரர்களும் விளையாடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகவே நடந்து வருகிறது. தமீம் இக்பால் இல்லாத நிலையில் வங்கதேசம் சாதிக்குமா, இல்லை அனைத்து பொறுப்புகளும் மீண்டும் ரஹிம் மீதே விழுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Next Story