விளையாட்டு திருவிழா - 10.09.2018 - இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
விளையாட்டு திருவிழா - 10.09.2018 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீராங்கனை ஓசாகா கைப்பற்றினார்.
விளையாட்டு திருவிழா - 10.09.2018
கடைசி டெஸ்ட்டிலும் இங்கிலாந்து ஆதிக்கம் சங்கக்காராவின் சாதனையை உடைத்த குக் கடைசி டெஸ்ட்டில் குக் சதம்
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு எடுத்து 160 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது அறிமுக போட்டியில் களமிறங்கிய விஹாரி நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 86 ரன்கள் எடுத்தார் இதனால் இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. 40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. கேப்டன் குக் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் முதல் டெஸ்ட்டில், கடைசி டெஸ்ட்டிலும் சதம் விளாசிய 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அதிக டெஸ்ட் ரன் குவித்தவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி 5வ இடத்தை குக் பிடித்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை ஓசாகா இறுதி போட்டியில் செரினா அதிர்ச்சி தோல்வி நடுவரை சரமாரியாக திட்டிய செரினா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீராங்கனை ஓசாகா கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்சை எதிர்கொண்ட ஓசாகா, 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையையும் 20 வயதான ஓசாகா பெற்றார்.
செரினா போட்டியை தோற்றதால் ரசிகர்கள் ஓசாகாவுக்கு எதிர்ப்பு குரல் அளித்தனர். அப்போது பேசிய செரினா,ஓசாகாவின் சாதனைக்கு மதிப்பளித்து, அவருக்கு மறக்க முடியாத தருணமாக இதனை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இறுதிப் போட்டியின் போது பயிற்சியாளரிடம் செரினா அறிவுரை பெற்றர். இது விதிகளுக்கு எதிரானது என்று நடுவர் எதிர்ப்பு தெரிவித்ததால், செரினாவுக்கும், நடுவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் எல்லை மீற நடுவரை பார்த்து நீங்கள் ஒரு பொய்யர், திருடன் என்று செரினா கோபமாக பேசினார். இதனால் சரினாவுக்கு ஒரு புள்ளிகள் அபாராதமாக விதிக்கப்பட்டது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் சாம்பிராஸ் சாதனையை சமன் செய்தார்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம், இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்றது. தர வரிசையில் 6 - வது இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் -சும், 3 - வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரா - வும் மோதினர். ஆரம்பம் முதலே, ஜோகோவிச்சின் கையே ஒங்கி இருந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6 க்கு 3, 7 க்கு 6, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை ஜோகோவிச், ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில், ரோஜர் ஃ பெடரர், ரபேல் நடால் ஆகியோரை அடுத்து, பீட் சாம்ரஸூடன் 3 - வது இடத்தை ஜோகோவிச் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சான் மாரினோ மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம் இத்தாலி வீரர் ஆண்டிரியா சாம்பியன்
SAN MARINO மோட்டோ கிராண்ட் பிரீ சைக்கிள் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் Andrea Dovizioso கைப்பற்றினார்.இத்தாலியின் மிசானோ ஒடுதளத்தில் நடைபெற்றது. உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். இதில் இத்தாலி வீரர் Andrea Dovizioso முதலிடத்தை தட்டிச் சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். நடப்பாண்டிற்கான சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மார்க்கேஸ், 2வது இடத்தில் நிறைவு செய்தார். இந்தப் பந்தயத்தின் போது வீரர்கள் சிலர் பயங்கர விபத்தில் சிக்கினர். இருப்பினும் , பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நெதர்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டிஉலக சாம்பியன் பிரான்ஸ் வெற்றி
நெதர்லாந்து அணிகளுக்கு இடைலியான ஐரோப்பிய நேஷ0னல் லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. பாரிஸ் நகரில் நடைபெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் 2க்கு1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் கெலியான் எம்பாப்பே, மற்றும் அலிவர் கோல் அடித்து பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இங்கிலாந்துக்கு எதிரான கால்பந்து போட்டி ஸ்பெயின் அணி அபார வெற்றி
இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. லண்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 11வது நிமிடத்திலே இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்தது. 13வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் அடித்தது. இதே போன்று 32வது நிமிடத்தில் ஸ்பெயின் 2வது கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. இறுதியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
தெற்காசிய கால்பந்து அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
தெற்காசிய கால்பந்து போட்டி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற லீக் சுற்றில் மாலத்தீவு அணியை 2க்கு0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
வெற்றிக்கு டிராவிட்டே காரணம்- விஹாரி
சிறந்த பேட்ஸ்மேனாக தாம் விளங்குவதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்று அறிமுக போட்டியில் அரைசதம் விளாசிய ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். போட்டிக்கு முன் டிராவிட்டிடம் தொலைப்பேசியின் மூலம் ஆலோசனை கேட்டதாகவும், தமது வெற்றிக்கு இந்திய ஏ அணி பயிற்சியாளராக இருந்த டிராவிட்டும் முக்கிய காரணம் என்று விஹாரி கூறியுள்ளார்.
உலக அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி 8வது சுற்றில் பிரேசில் வீரர் சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற அலைச்சறுக்கும் போட்டியில் பிரேசில் வீரர் கெப்ரியல் மெதினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா. செயற்கையான அலையில் வீரர்கள் அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். இதில் அதிக புள்ளிகள் பெற்று பிரேசில் வீரர் கெப்ரியல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Next Story