விளையாட்டு திருவிழா - 05.09.2018 - ரவி சாஸ்திரியின் செயல்பாடு எப்படி இருக்கு?
ரவி சாஸ்திரி மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி ஏன்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். விராட் கோலியுடன் அவர் கொண்ட நட்பின் காரணமாக, கோலியின் ஆதரவுடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே.கேப்டன் மற்றும் வீரர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுவதும், அணியை எப்படி பலப்படுத்துவது, எப்படி யுத்திகளை கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதே பயிற்சியாளரின் பணி.ஆனால் பயிற்சியாளர்கள் தாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என்றும், தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதையே இப்போதுள்ள கேப்டன்கள் விரும்புகின்றனர். இதனால் தான் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் என்பது தனிக்கதை.சரி ரவி சாஸ்திரி, விராட் கோலியின் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்பதை தற்போது காணலாம் ரவி சாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு இந்தியா 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றி, 5 தோல்வி, 2 டிராவை இந்தியா கண்டுள்ளது. தோல்வி அடைந்த 5 போட்டிகளில் 4 போட்டியில் இந்தியா வென்றிருக்க வேண்டியது. அதற்கு வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
ரவி சாஸ்த்ரி பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 22 போட்டிகளில் 18 போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 4 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதில் கடைசியாக நடந்த இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது.இந்திய அணி மீதுள்ள தற்போது குற்றச்சாட்டுகளே திறமையாக வீரர்கள் இருந்தும் தோல்வி அடைவது தான். இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், கேப்டன் கோலியுமே காரணம் என்று முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Next Story