சுவிடன் Vs சுவிட்சர்லாந்து அணிகள் இன்று மோதல்

1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதே நாள் சுவிடன் அணி, நாக் அவுட் சுற்றில் விளையாடி வெற்றி.
சுவிடன் Vs சுவிட்சர்லாந்து அணிகள் இன்று மோதல்
x
சுவிடன் Vs சுவிட்சர்லாந்து அணிகள் இன்று மோதல்


சுவிடன், சுவிட்சர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதே நாள் சுவிடன் அணி, நாக் அவுட் சுற்றில் விளையாடி வெற்றி பெற்று இருக்கு..சுவிடன் களமிறங்கும் 50வது உலகக் கோப்பை போட்டியாகும் ஆனால் சுவிட்சர்லாந்து அணி கடந்த 64 ஆண்டுகளாக நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்றதில்லை.இரண்டு அணிகளுமே முக்கிய வீரர்களை சஸ்பென்சன் காரணமா இழந்துட்டாங்க.சுவிஸ் அணியின் கேப்டன் ஸ்டிபன் லீச்ஸ்டினர் Stephan Lichtsteiner, ஃபெபியன் FABIAN ஆகியோரும்,  இதே மாதிரி சுவிடன் அணி செபாஸ்டியன் லார்சனும் சஸ்பென்சல் இருக்காரு.இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளனர். இதில் சுவிட்சர்லாந்து அணி 11 முறையும், சுவிடன் 10 முறையும் மோதியிருக்காங்க. 8 போட்டி டிராவில் முடிஞ்சிருக்கு. சுவிட்சர்லாந்து அணி கடைசியா விளையாடிய 25 போட்டியில் ஒரு முறை தான் தோல்வி கண்டு இருக்கு. 


கொலம்பியா Vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை



இரவு 11.30 மணிக்கு கொலம்பியாவும், இங்கிலாந்தும் மோதுது.  நாக் அவுட் சுற்றில் கொலம்பியா 3வது முறை தகுதி பெற்று இருக்கு.கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வரை தோற்றதில்லை. உலகக் கோப்பை வரலாற்றில் கொலம்பியா , இங்கிலாந்தும் ஒரு முறை மோதியிருக்கு அதில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கு.கொலம்பிய அணியின் முக்கிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகிறிஸ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாட்றது கேள்விக்குறியா இருக்கு..இங்கிலாந்து அணியின் பலமாக கேப்டன் ஹாரி கேன், ஸ்டேர்லிங் உள்ளிட்டோர் கருதப்படுகிற்ர். 


Next Story

மேலும் செய்திகள்