திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா!
திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா!
திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 4ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கிய நிலையில், 6வது நாளில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா காரணமாக 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட பூஜை, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை, சூரசம்ஹார நிகழ்விற்காக சுவாமி ஜெயந்திநாதர், கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு யானை முகன் உருவில் வந்த தாரகாசூரனை வதம் செய்த ஜெயந்திநாதர், தொடர்ந்து சிங்கமுகாசூரனை வதம் செய்தார். இதையடுத்து, ஜெயந்திநாதர் தனது வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார். இறுதியாக சூரபத்மன் சேவல் உருவில் ஜெயந்திநாதரின் பாதத்தில் சரணாகதி அடையும் நிகழ்வுடன், சூரசம்ஹார விழா நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story