சீனாவின் கொட்டத்தை அடக்க மிரட்ட வரும் இந்திய ராணுவத்தின் `ஜோராவார்'
இந்தியா தயாரிப்பான ஜோராவார் லைட் வெயிட் டேங்கர், 2027-ல் ராணுவத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் காமத் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவார் லைட் வெயிட் டேங்கரை உருவாக்கியிருக்கிறது. கிழக்கு லடாக்கில் சீனாவை எதிர்க்கொள்ள இந்திய ராணுவத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் ஜோராவார் லைட் வெயிட் டேங்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இலகுரக டேங்கர்களால் ஆறுகளையும், நீர்நிலைகளையும் கடந்துச் செல்லமுடியும். செங்குத்தான மலைகளிலும் ஏறும் வல்லமையை கொண்டது. ஜோராவார் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் குஜராத்தில் டேங்கர்கள் தயாரிப்பு பணிகளை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் காமத் பார்வையிட்டார். அவர் ஜோராவார் டேங்கர், 2027-ல் ராணுவத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டு முயற்சி பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக கூறியிருக்கும் எல் அண்ட் டி நிறுவன துணைத் தலைவர் அருண் ராம்சந்தானி, குறுகிய காலத்திலேயே டேங்கரை வடிவமைத்திருப்பதாக நெகிழ்ந்துள்ளார்.