காசாவை சூழ்ந்த எமன்..."சாத்தியமில்லை..." ஐ.நா. பகீர் கிளப்பிய ஐ.நா
காசாவின் முழுப் பகுதியும் முற்றுகையிடப்பட்டிருக்கும் போது, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உணவு, தண்ணீர், தங்குமிடம் என எதுவும் இல்லாத இடத்திற்கு மாற்றுவது என்பது மிகவும் ஆபத்தானது... அது சாத்தியமில்லை என ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்... காசா மக்களுக்காக 24 மணி நேரமும் தங்கள் ஊழியர்கள் உழைத்து வருவதாகத் தெரிவித்த அவர், உடனடியாக காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும், அப்போது தான் அனைவருக்கும் எரிபொருள், உணவு மற்றும் தண்ணீரை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் போர்களுக்கும் விதிகள் உண்டு என தெரிவித்த அவர், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்... மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்த அவர், காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்...