குழந்தை பெற விரும்பாத பெண்கள்.. ஆய்வில் தெரிய வந்த பகீர் காரணம் - எச்சரிக்கும் வல்லுநர்கள்
ஜப்பானி ய பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர்,
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்ப வில்லை என்று
ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணி பற்றி
இந்தத் தொகுப்பு அலசுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதரமாக உள்ள,
ஜப்பானில் கடந்த 14 வருடங்களாக மக்கள் தொகை
தொடர்ந்து குறைந்து வருகிறது.
2022ல் ஜப்பானின் மக்கள் தொகை 12.24 கோடியாக
2021 அளவை விட 8 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது.
தற்போது 18 வயதாகும் ஜப்பானிய பெண்களில், 33.4 சதவீதத்தினர், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று தேசிய மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு காரணமாக, குழந்தைகள் வளர்ப்புக்கு ஆகும் செலவு வெகுவாக அதிகரித்து வருவதால், பலரும் திருமணம் மற்றும் குழந்தை பெறுவதை தள்ளிப் போடு கின்றனர் அல்லது தவிர்த்துவருகின்றனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
விலைவாசி உயர்வு ஒரு பக்கம் என்றால், 1975 முதல் 2021 வரை அரசு பல்கலைகழங்களில் கல்வி கட்டணங்கள் மட்டும்19 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அங்குள்ள பெண்களை பெரும் கவலை கொள்ள செய்துள்ள தாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985ல், ஜப்பானிய பெண்கள் சராசரியாக 25.5 வயதில்
திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், 2020ல், இது
29.4 வருடமாக அதிகரித்து விட்டதாக தரவுகள் கூறுகின்றன. இதுபோன்ற காலதாமத திருமணங்களாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் தற்போது குழந்தை பிறப்பின் சாரசரி அளவு, பெண் ஒருவருக்கு 1.36ஆக சரிந்துள்ளது. இது 2.1க்கும் கீழே குறையும் பட்சத்தில், மக்கள் தொகை படிப்படியாக குறையும் என்பதே எதார்த்தம்.
2022 கணக்கெடுப்பின் படி ஜப்பானின் மக்கள் தொகை 12.24 கோடியாக உள்ள நிலையில், இது 2070ல் 8.7 கோடியாக சரியும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மக்கள் தொகை குறைந்தால், உற்பத்தி குறைந்து, ஜப்பானிய
பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு அளிக்கப்படும் உதவி தொகையை வெகுவாக அதிகரிகப் போவதாக ஜப்பான்
பிரதமர் கிஷிடா கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஆனால்,பிரதமரின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்க வில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஜப்பான அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லது கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர் அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள்.
குழந்தை பெற விரும்பாத ஜப்பானிய பெண்கள்