ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர்...ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் - தண்ணி குடித்தால் இப்படி நடக்குமா?

x

டிக் டாக் சவாலுக்காக அதிகமாக தண்ணீர் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு இப்போது தண்ணீரே எமனாகியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. இன்றைய இளம் தலைமுறையினரிடம் உடலை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கிறது, என்பதை நாம் அன்றாட பார்க்கிறோம். இதற்காக கடுமையான டயட்.. வொர்க் அவுட்... என சில விபரீத முயற்சிகளையும் அசாதாரணமாக கையாண்டு அவதியில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அப்படித்தான் கனடாவை சேர்ந்த இந்த பெண்ணும்....‌ டிக் டாக்கில் பிரபலமாகி வரும் '75 ஹார்ட் challenge'-க்காக தினமும் அதிகமாக தண்ணீர் குடித்ததால்... கடும் உடல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் படுத்த படுக்கையாகிருக்கிறார்.

75 hard challenge என்பது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டிக் டாக்கில் பிரபலமாக உள்ளது. 75 hard challenge-ன் படி, நாளொன்றுக்கு உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் மொத்தம் இரு முறை 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்... ஸ்டிரிட்டான டயட்டை பாலோ செய்ய வேண்டும்... மது அருந்தக்கூடாது... நாளொன்றுக்கு நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்... மறக்காமல் தினமும் ஒரு புத்தகத்தில் பத்து பக்கமாவது வாசிக்க வேண்டும்... தினமும் தங்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து கொள்ள புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இந்த சேலஞ்சின் ரூல்ஸ். இப்படி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக...நாம் பார்க்கும் இந்த பெண்மணியோ.... நாள் ஒன்றுக்கு நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து வந்துள்ளார். இப்படி 75 நாட்களுக்கு தொடர்ந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில் வெறும் 12 நாட்களில்.... வாந்தி... உடல் சோர்வு.... அதிக முறை சிறுநீர் கழித்தல் என பெரும் அவதிக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அங்கு Michelle fairburn-ஐ பரிசோதித்த மருத்துவர்கள்....‌ அதிக தண்ணீர் குடித்ததால் அவர் உணவு ஒவ்வாமை போல் 'தண்ணீர்' ஒவ்வாமையால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்கள். மேலும் சிறுநீரில் இருந்து வெளியேற்றப்படும் நீரை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும் பொழுது உடலில் ஏற்படும்.... சோடியம் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் நாள் ஒன்றுக்கு அரை லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்றும்.... மீண்டும் அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் அது அவரது உயிருக்கே எமனாகி விடும் என்றும் எச்சரித்து இருக்கிறார்கள். பொதுவாக நாள் ஒன்றுக்கு 6-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.... என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதுவும் தற்போது.... பளபளப்பான சருமத்திற்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற செலிபிரிட்டிகளின் அறிவுரைகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த வேளையில் தான்... 'தண்ணியாக இருந்தாலும் அளவுக்கு மீறி குடிக்க கூடாது... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும்... என பாடம் புகட்டி இருக்கிறது, இந்த சம்பவம்.


Next Story

மேலும் செய்திகள்