பைடனை ஓடவிட்ட ட்ரம்ப்; திருப்பி கொடுப்பாரா கமலா? பாதகமான விதி- தலையெழுத்தை மாற்றுமா ஃபிலடெல்ஃபியா..?

x

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு நேரடி விவாத நிகழ்ச்சியில் ட்ரம்ப்பும்-கமலா ஹாரிசும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், விவாதம் பற்றிய முக்கிய அம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தேர்தல் பிரச்சாரங்கள்...

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசும் சூறாவளி பயணம் மேற்கொண்டு அனல் பறக்கும் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்...

அந்த வகையில் வழக்கமாக அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் விவாதம் மிகவும் முக்கியமானது...

என்னதான் பிரச்சாரத்தில் ஆதரவு திரட்டினாலும்...ஒற்றை விவாதம் தேர்தல் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டது...

அதற்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் பைடன் தேர்தல் பந்தயத்தில் இருந்து விலகியது மிகச்சிறந்த உதாரணம்...

ட்ரம்ப்புடன் நேருக்கு நேர் விவாதித்த பைடன் தோல்வியைத் தழுவிய நிலையில் சொந்தக் கட்சியினரின் வற்புறுத்தலாலேயே தேர்தலில் இருந்து விலகும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டார்...

இதோ...இந்தத் தேர்தலுக்கான 2வது நேரடி விவாதம் நாளை காலையில்...

இந்திய நேரப்படி சரியாக நாளை காலை ஆறரை மணிக்கு நடக்கிறது...

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே...

பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் விவாதம் அரங்கேறுகிறது...

ABC நிறுவனம் நடத்தப்போகும் இந்த ஒன்றரை மணி நேர விவாதத்தில் லைவ் ஆடியன்சோ...லைவ் மைக்கோ இருக்கப் போவதில்லையாம்...

இதனால் ட்ரம்ப்புடன் அவர் நேருக்கு நேர் பேச முடியாது என்பதால் கமலாவுக்கு பாதகமாக அமையக்கூடும் என கமலா ஹாரிஸ் சார்பில் ABCக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது...

ABC தொகுப்பாளர் டேவிட் முயர் மற்றும் World News Tonight தொகுப்பாளர் லின்சி டேவிஸ் ஆகியோர் உலகமே உற்று நோக்கும் இந்த விவாதத்தைத் தொகுத்து வழங்கவுள்ளனர்...

கமலா ஹாரிஸ் மேடையின் வலப்பக்கத்திலும், ட்ரம்ப் இடப்பக்கத்திலும் நின்று பேசவுள்ளனர்...

அவர்களுக்கு தண்ணீர், பேனாக்கள், காகிதங்கள் வழங்கப்படும்...

முன்கூட்டியே கேள்விகள் குறித்த தகவல்கள் வழங்கப்படாது...

இருவரும் இறுதியில் 2 நிமிட முடிவுரை கொடுக்கலாம்...அதில் கடைசியாக பேசப்போவது ட்ரம்ப்...டாசில் வென்றதன் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார் ட்ரம்ப்...

போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்க முடியாது... ஏற்கனவே எழுதப்பட்ட குறிப்புகளுக்கு அனுமதி இல்லை...

இருவருக்கும் கேள்வி கேட்க 2 நிமிடங்கள்...மறுத்து பேச 2 நிமிடங்கள்...ஏதேனும் தகவல் கூற 1 நிமிடம் வழங்கப்படும்...

ஒரு வழக்கறிஞரான தன்னாலேயே தனது மனைவியை வீட்டில் விவாதத்தில் ஜெயிக்க முடிந்ததில்லை என கமலா ஹாரிசின் கணவர் கூறியிருந்த நிலையில்,

மிக வலிமையான வழக்கறிஞரான கமலா ஹாரிசுக்கு எதிராக ட்ரம்ப் திறமையாக வாதிடுவாரா?...பொறுத்திருந்து பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்