கடும் போர் நிகழ்ந்தால் என்ன... அன்பு மாறாதே..!உக்ரைன் பெண்ணை கரம் பிடித்த ரஷ்ய இளைஞர்
கடும் போர் நிகழ்ந்தால் என்ன... அன்பு மாறாதே..!உக்ரைன் பெண்ணை கரம் பிடித்த ரஷ்ய இளைஞர்
உக்ரைன் பெண்ணும், ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட இளைஞரும், இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உக்ரைனை சேர்ந்த அலோனா புர்மாகாவும், ரஷ்யாவில் பிறந்து இஸ்ரேலில் வசித்து வந்த சர்கேவும் 6 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இருவரும் காதலித்த நிலையில் உக்ரைன் போரால் இந்தியா
வந்துள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மூலம் இருவரது திருமணமும்
சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த இருவரது திருமணமும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திருமணம் அன்பை
மட்டுமே வெளிப்படுத்துவதாகவும் தர்மசாலா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையே கடும் போர் நிகழ்ந்து வந்தாலும், திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடிகள், அன்பினால்
அனைவரும் ஒன்றே என நிரூபித்துள்ளனர்.