நம்ம வீட்டு கிச்சனில் ஃபாரின் ரெசிபி.../நாவூற வைக்கும் - VEGAN NUGGETS.../சன்

x

நம்ம வீட்டு கிச்சனில் ஃபாரின் ரெசிபி.../நாவூற வைக்கும் - VEGAN NUGGETS.../சன்

புரட்டாசி மாசம் வந்ததுல இருந்து... மூக்கை... நாக்கையும் கன்ட்ரோல் பண்ணி வச்சுருப்பீங்கனு தெரியும்... இருந்தாலும் எண்ணங்கள் எல்லாம் நான் வெஜ் மேல தான் இருக்கும்... என்ன பன்றது... நம்ம நாக்கு அப்டி சாப்ட்டு பழகிடுச்சு...

சரி... சரி... கவலை படாதீங்க.... இந்த மாதிரி நேரத்துல நம்ம கஸ்டத்தை புரிஞ்சுகிட்ட சீனா காராங்க... நான்வெஜ் டேஸ்ட்ல ஒரு வெஜிட்டேரியன் nuggets ரெசிபிய கண்டு பிடிச்சுருக்காங்க...

ஆஹா... விசுவலா பாக்கும் போதே பசி எடுக்க ஆரம்பிக்குதே... சரி வாங்க சமைச்சு சாப்பிட ஆரம்பிக்கலாம்..

VEGAN NUGGETS சமைக்க தேவையான பொருட்கள்... soya chunks , மிளகாய் பொடி, சீரக பொடி, கரம் மசாலா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உருளை கிழங்கு, கார்ன் பிளார் மாவு, மிளகு தூள், மைதா, கார்ன் பிளேக்ஸ், எண்ணெய்... அவளோ தான் இனி சமையலை ஸ்டார்ட் பண்ணிடலாம்...

சமையலின் முதல் கட்டமா... அரை கப் soya chunks-அ ஒரு பெரிய பாத்திரத்துல போட்டு... அதுல சுடு தண்ணிய ஊத்தி ஒரு இருபது நிமிஷத்துக்கு ஊற வச்சுக்கோங்க...

நெக்ஸ்ட்டு ஊறுன சோயா chunks-ச வடிகட்டி நல்லா புளிஞ்சு எடுத்து... மிக்சில போட்டு நல்லா மாவு பத்தத்துக்கு அரைச்சு... வேற ஒரு பாத்துரத்துல மாத்திக்கோங்க...

அடுத்து ரெசிபிக்கு டேஸ்ட் குடுக்க... அரை ஸ்பூன் மிளகாய் பொடி, சீரகப்பொடி, கரம் மசாலா, நறுக்கி வச்ச பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் நறுக்கிய கொத்த மல்லி, முக்கால் ஸ்பூன் உப்பு , ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்... இது எல்லாத்தையும் சரியான அளவுள போட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க...

மிக்ஸ் பண்ணி முடிச்சதும் அதுமேல வேக வச்சு துருவுன உருளை கிழங்கு அரை கப், கார்ன் பிளார் மாவு இரண்டு ஸ்பூன் இது எல்லாத்தையும் போட்டு மறுபடியும் நல்லா மிக்ஸ் பண்ணிக்கனும்...


சமையலின் அடுத்த கட்டமா... மிக்ஸ் பண்ணி வச்ச மாவ... சின்ன சின்னதா பிச்சு எடுத்து... கொழுக்கட்ட பிடிச்சு வச்சா... சமையலோட பாதி வேலை ஃபினிஸ்...

இதுக்கே சோந்துட்டா எப்படி...? வாங்க மீதி சமையல் வேலையயும் முடிச்சுடலாம்...

அடுத்து ஒரு சின்ன பாத்திரத்துல அரை கப் கார்ன் பிளார் மாவு, மைதா, கால் ஸ்பூன் மிளகு தூள், உப்பு போட்டு... அதுல அரை கப் தண்ணிய ஊத்தி நல்லா தோசை மாவு மாதிரி மிக்ஸ் பண்ணிடுங்க...

ரெசிபிக்கு மொரு மொருப்பான டேஸ்ட் குடுக்க கொஞ்சம் கார்ன் பிளேக்ஸ்ஸ தூள் தூளா நொருக்கி வச்சுக்கோங்க... நெக்ஸ்ட்டு கொழுக்கட்ட மாதிரி புடிச்சி வைச்ச NUGGETS-அ கார்ன்பிளார் மாவுல முக்கி... கார்ன் பிளேக்ஸ்ல பொரட்டி எடுத்து... கொதிக்குற எண்ணெய்ல போட்டு பொன்நிறத்துல பொறிச்சு எடுத்தா... க்ரஞ்சியான... டேஸ்டியான... VEGAN NUGGETS ரெடி...

அப்புறம் என்ன இந்த சன்டேய VEGAN NUGGETS- ஒட செலப்ரேட் பண்ண வேண்டியது தான்...



Next Story

மேலும் செய்திகள்