"பேரழிவு..." டிரம்பை கொதிக்க விட்ட கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில்
ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மிச்சிகன்
மாகாணம் பிளிண்ட் நகரில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக
பிரபல கூடைப்பந்து வீரர் மேஜிக் ஜான்சன்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய
மேஜிக் ஜான்சன் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக
கமலா ஹாரிசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று
கேட்டு கொண்டார். பின்னர் பேசிய கமலா ஹாரிஸ்
டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்காவில்
2 லட்சத்திற்கும் அதிகமான உற்பத்தி நிறுவனங்களில்
வேலைவாய்ப்புகள் பறிபோனதாகவும் , ஆட்டோமொபைல்
துறை பேரழிவை சந்தித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
Next Story