பைடனை பார்த்து தடித்த வார்த்தையை விட்ட ட்ரம்ப்.. பற்றி எரியும் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ள டிரம்ப், கமலா ஹாரிசும் அப்படிப்பட்டவர் தான் என கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். இருவரும் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து, தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணம் பிரெய்ரி டு சின் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், அதிபர் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என விமர்சித்துள்ளார். அதற்கு காரணம், பைடன் நிர்வாகத்தின் எல்லைக் கொள்கையே எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
Next Story