கமலாவை சாய்க்கும் அஸ்திரம் - கைகோர்த்த டிரம்ப் -எலான்..! யாரும் எதிர்பார்க்காத `GOAT' மூவ்..

x

ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் தனது அரசாங்கத்தில் எலான் மஸ்க்கிற்கு வழங்கப் போகும் பதவியை முடிவு செய்து விட்டார்... மஸ்க்கிற்கு என்ன பதவி?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

முன்னாள் அமெரிக்க அதிபரும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்குபவருமான டொனால்ட் ட்ரம்ப்... கடந்த மாத தொடக்கத்தில்... தான், ஆட்சிக்கு வந்தால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், x தள உரிமையாளருமான எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்...

அதற்கு "சேவை செய்யத் தயார்" என பச்சைக் கொடி காட்டியிருந்தார் மஸ்க்...

இந்நிலையில், அது என்ன மாதிரியான பதவி என்ற தகவல் வெளியாகியுள்ளது...

அரசு துறைகளில் செலவினங்களைக் குறைக்க...தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும்... அதில் மஸ்க் உள்ளிட்ட மிக முக்கியமானவர்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இதற்கு பதிலளித்துள்ள மஸ்க்..."அரசு துறைகளில் களையப்பட வேண்டிய நிறைய தேவையற்ற கட்டுப்பாடுகள் உள்ளன... பணியாற்ற

ஆர்வமாக உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்...

சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட...மஸ்க் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது... "மஸ்க் மிகவும் புத்திசாலி...அவர் வரத் தயாரென்றால் நான் பதவி தரத் தயார்" என்பதைப் போல் உற்சாகமாக பேசியிருந்தார் ட்ரம்ப்...

மேலும் ட்ரம்ப்பும் மஸ்க்கும் இணைந்து ஒரு நேர்காணல் அளித்திருந்தனர்...

அதில், அரசாங்க செலவினங்களை மேற்பார்வையிடுவதற்காகவும்... மேம்படுத்துவதற்காகவும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் எனவும், அதில் உதவத் தயார் எனவும் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்...

இதை வெகுவாக வரவேற்ற ட்ரம்ப்...மஸ்க்கின் நிபுணத்துவத்தை பாராட்டியதுடன்... 90% X தள பணியாளர்களை மஸ்க் பணிநீக்கம் செய்ததைக் குறிப்பிட்டு..."You're the greatest cutter" என புகழ்ந்திருந்தார்...

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து...அமைச்சரவை வரை முடிவு செய்து கொண்டிருக்கும் நிலையில்...கருத்துக் கணிப்புகள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசுக்கு ஆதரவாக வந்து கொண்டிருப்பது ட்ரம்ப் ஆதரவாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்