ரஷ்யா vs உக்ரைன்.. இந்தியா யாரின் நண்பன் - உலகத்துக்கு உரக்க சொன்ன மோடி

x

உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், போர் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் இந்தியா அமைதி முயற்சிகளை தீவிரமாக திட்டமிட்டுள்ளது என்பதை உலகம் அறியும், எங்கள் அணுகுமுறை மக்களை மையமாக கொண்டது என்பதை நீங்களும் அறிவீர்கள் என பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசியபோது சில மாதத்திற்கு முன்பு அதிபர் புதினை சந்தித்தப்போது இது போருக்கான நேரமல்ல என்று கூறியிருந்தேன். இப்போது ரஷ்யாவுக்கு சென்றபோது, போர்களத்தில் தீர்வு கிடைக்காது என்பதை தெளிவாக எடுத்துரைத்தேன். பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலமாகவே தீர்வு வரும், நேரத்தை வீணடிக்காமல் அந்த திசையை நோக்கி நாம் முன்னேற வேண்டும். இருதரப்பும் பேசி நெருக்கடியிலிருந்து மீள வழிகளை கண்டறிய வேண்டும். அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தீவிரப் பங்கு ஏற்க தயாராகவே இருக்கிறது, அமைதிக்கு நான் தனிப்பட்ட முறையில் பங்களிக்க முடிந்தால், நான் அதையும் செய்ய விரும்புகிறேன், ஒரு நண்பராக, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசின் பீஷ்ம திட்டத்தில் உருவாக்கப்பட்ட அவசரகால மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி உக்ரைனுக்கு வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்