தங்க சுரங்கத்தில் துடிக்கும் 9 உயிர்கள்...நீரை போல பாய்ந்து செல்லும் கொடூர மண்
தங்க சுரங்கத்தில் துடிக்கும் 9 உயிர்கள்...நீரை போல பாய்ந்து செல்லும் கொடூர மண் - குலைநடுங்கவிடும் காட்சிகள்
துருக்கியில் உள்ள தங்கக் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தொழிலாளர்கள் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த சுரங்கத்தில், மண், மலைகள் போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 9 சுரங்கத் தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து, 400 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர், மாயமான தொழிலாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்டு, மண் தண்ணீரைப் போல பாய்ந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
Next Story