சுனாமி வார்னிங்... கொந்தளிப்பில் கடல்... அதிர வைத்த நிலநடுக்கம்... பீதியில் பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிண்டானாவ் பகுதி அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. 63 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், தற்போது சுனாமி அபாயம் கடந்துவிட்ட நிலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி தெற்கு மிண்டானாவ் பகுதியில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Next Story