டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்... டிரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

x

நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் மீண்டும் போட்டியிடப் போவது இல்லையென முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறத் தொடங்கியிருந்தாலும், டிரம்ப்பும் ஆளும் ஜனநாயக கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற டிரம்ப், வருகின்ற தேர்தலில் தோல்வியுற்றால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்