டிரம்ப் செய்த காரியம் - கடுமையாக விமர்சித்த கமலா ஹாரிஸ்
டிரம்ப்பின் செயல்கள் அனைத்துமே ஒரு அரசியல் ஸ்டண்ட் என, கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.போரில் உயிர் நீத்த வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சமீபத்தில் சென்ற டிரம்ப், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு தேர்தல் பிரச்சாரமும் செய்தார். அவருடன் வந்த அவரது ஊழியர்கள், போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தும் நோக்கத்தில், நிகழ்ந்த இந்த செயல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், டிரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில், டிரம்ப் புனித பூமியை அரசியல் ஆக்குவதாகவும், அவர் செயல் எல்லாமே ஒரு அரசியல் ஸ்டண்ட் தான் என குறிப்பிட்டுள்ளார்.
தனது சுயநலத்திற்காக டிரம்ப் எதையும் செய்யக் கூடியவர் என குற்றம்சாட்டியுள்ள கமலா ஹாரிஸ், ஆர்லிங்டன் கல்லறை, அரசியலுக்கான இடம் அல்ல என்றும், ராணுவ குடும்பங்கள் கவுரவிக்கப்பட வேண்டும், ஒருபோதும் இழிவுபடுத்தப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.