டிரம்ப் ஆதரவாளர்களையும் வியந்து பார்க்க வைத்த கமலா ஹாரிஸின் ஒற்றை அறிவிப்பு

x

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், குடியரசுக்கட்சியில் இருந்தும் ஒருவரை அமைச்சரவையில் நியமிக்க இருப்பதாக அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், துணை அதிபரும், அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் ஒன்றாக பேட்டியளித்தனர். அப்போது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் தான் சேவையாற்ற விரும்புவதாகவும், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியரசுக் கட்சியிலிருந்தும் ஒருவரை அமைச்சரவையில் நியமிக்க இருப்பதாகவும், கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். துணை அதிபரானதற்குபின் ஜார்ஜியாவுக்கு மட்டும் 17 முறை பயணம் செய்துள்ளதாகவும், பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்வுகாண்பது அவசியம் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்