ட்ரம்ப்-ஐ கொல்ல முயன்றவரின் சாஃப்ட் பின்னணி.. எளியான புதிய பகீர் தகவல்கள் | Thanthitv

x

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த தனது பிரச்சாரக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்ற 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக, துப்பாக்கிச் சூடு பயிற்சியை மேற்கொண்டுள்ளார்... மறுநாள் காலை, க்ரூக்ஸ் 5 அடி உயர ஏணியும், துப்பாக்கி கடையில் இருந்து 50 தோட்டாக்களையும் வாங்கியுள்ளார்... ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த கட்டடத்தின் மீது ஏறுவதற்கு க்ரூக்ஸ் அந்த ஏணியைத் தான் பயன்படுத்தியுள்ளார்... துப்பாக்கிச் சூடு நடத்திய க்ரூக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் எதற்காக இந்த வன்முறையில் ஈடுபட்டார் என்பது இதுவரை தெரியவில்லை... 2022 இல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற க்ரூக்ஸ், மிகவும் நன்கு படிக்கும் அமைதியான மாணவர் என்று அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்