டிக்-டாக்கில் என்ட்ரி கொடுத்த டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் டிக் டாக்கில் புதிய கணக்கு தொடங்கி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதிபராக இருந்தபோது, சீனாவின் டிக் டாக் செயலியை தடை செய்ய டிரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களால் தடைசெய்யப்பட்டன. டிக் - டாக் செயலி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பேசி வந்த டிரம்ப், தனக்கு எதிராக வெளியான நீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்த நாளே, டிக் - டாக் செயலியில் புதிய கணக்கு தொடங்கி இருப்பது அவரது தேர்தல் அஸ்திரமாக பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் பைடனும், தனது பிரச்சார டிக்டாக் கணக்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story