அமெரிக்க தேர்தலில் திடீர் மாற்றம் - உடனே ஆதரவாளர்களுக்கு டிரம்ப் வைத்த வேண்டுகோள்

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். வாக்குப்பதிவு நேரம் நீ​ட்டிக்கப்படுவதாக கூறப்படுவதை விமர்சித்த அவர், தனது ஆதரவாளர்கள் முன்கூட்டியே வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், பிரச்சாரத்தின்போது கமலா ஹாரிசுக்கு எதிராக டிரம்ப் ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்