அசாம் வந்த பூட்டான் மன்னர் - வடகிழக்கு மாநிலத்திற்கு பயணிப்பது இதுவே முதன்முறை
அசாம் மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்றார். இன்று முதல் வரும் 10ம் தேதி வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பூடான் மன்னர், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா - பூட்டான் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பூட்டான் மன்னர் வடகிழக்கு மாநிலத்திற்கு பயணிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story