"கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.." - அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை
ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கத்தால் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் எச்சரித்துள்ளார்... மேலும், ஈரானால் ஹவுதிக்கு வழங்கப்படும் ஆதரவும் நிறுத்தப்பட வேண்டும் என பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்... லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானின் ஆதரவுடன் ஆயுதக் குழுக்கள் ஒன்று திரண்டு தாக்குதல்களை நடத்துவதால், இப்போர் பிராந்தியம் முழுவதும் பரவக்கூடும் என அமெரிக்கா தொடர் எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது...
Next Story