"விலை கொடுக்க நேரிடும்" - வடகொரிய அதிபர் கிம்-க்கு பறந்த கடைசி எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதம் வழங்கினால், அதற்கான உரிய விலையை கிம் ஜாங் உன் கொடுப்பார் என அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினை சந்திக்க உள்ளதாகவும், இரு நாடுகளுக்கிடையே ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கினார், அதற்கான விலையை கிம் ஜாங் உன் கொடுக்க நேரிடும் என்றார்.
Next Story