போருக்கு விதை போட்ட வீடியோ.. மொசாட்டை ஏமாற்றிய பயங்கரவாதி.. இளம்பெண் கெஞ்சியும் கொன்ற ஹமாஸ்

x

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, போர் வெடித்தது. 47வது நாளாக இன்றும் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள கிப்ருட் நகரில் நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஹமாஸ் ஆயுத குழுவிடமிருந்து தப்பியோட முயற்சிக்கின்றனர். எனினும், அவர்களை ஆயுதக்குழுவினர் விரட்டிச் செல்கின்றனர். அப்போது, ஒரு பெண்ணை மடக்கிய, பயங்கரவாதி ஒருவர், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும், இரக்கமின்றி சுட்டுக்கொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்