இந்திய தூதருக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர் | Sri Lanka | India

x

இந்தியா- இலங்கை இடையேயான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா கூறினார். கொழும்பில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - இலங்கை இடையே பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், உத்தேச கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழி வகைகள் குறித்தும் ஆராயப்பட்டன. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுப்படுத்தி, நிவாரணப் பொருட்களை வழங்கி, இலங்கைக்கு ஆதரவுக்கு அளித்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்