நிதியமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பிரதமர்.. இங்கிலாந்தில் பரபரப்பு
நிதியமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பிரதமர்.. இங்கிலாந்தில் பரபரப்பு
பொருளாதார முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் அந்நாட்டு நிதியமைச்சரை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார்.
இங்கிலாந்து கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், புதிய பிரதமராக பதவி ஏற்ற லிஸ் ட்ரஸ், கடந்த மாதம் வெளியிடப்பட்ட மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
ஆனால் இந்த அறிவிப்பால் பொருளாதாரம் மேலும் நிலைகுலைந்து, டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்தது.
இதனால் சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகளை எதிர்கொண்ட லிஸ் ட்ரஸ், அந்நாட்டு நிதியமைச்சர் க்வாசி க்வார்டெங்கை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
அத்துடன், நிறுவனங்களுக்கான வரி உயர்வு ரத்து, அதிக வருமானம் ஈட்டுவோருக்கான உயர் வருமான வரி நீக்கம் ஆகியவை திரும்பப் பெறப்பட்டன.
க்வார்டெங்கிற்கு பதிலாக முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜெரிமி ஹண்டை புதிய நிதியமைச்சராக லிஸ் ட்ரஸ் நியமித்துள்ளார்.