பிரிட்டன் மன்னர் இருக்கும்போதே வெளியேறிய ரிஷி சுனக்...தவறுக்கு மன்னிப்பு கோரினார்
பிரிட்டன் மன்னர் இருக்கும்போதே வெளியேறிய ரிஷி சுனக்...தவறுக்கு மன்னிப்பு கோரினார்
பிரான்சில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொள்ளாதது தவறு தான் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு தெரிவித்துள்ளார். நார்மண்டியில் நடந்த இந்த நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் பங்கேற்றிருந்தனர். ஆனால் ரிஷி சுனக் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளிப்பதற்காக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ரிஷி சுனக்கின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிய நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
Next Story