டிரம்ப்புக்கு எதிராக மாறிய வழக்கறிஞர் - கழுத்தை நெறிக்கும் "ஆபாச" கயிறு
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில்
மீண்டும் போட்டியிடும் டிரம்ப் மீது நான்கு குற்ற வழக்குகள்
நிலுவையில் உள்ளன. ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சட்ட விரோதமான முறையில் டிரம்ப் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் பணம் அளித்தது தொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க் நகரின் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திங்களன்று இந்த வழக்கில் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் சாட்சியம் அளித்தார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்புடன் தனக்கு இருந்த உறவை பற்றி ஸ்டார்மி டேனியல்ஸ் வெளிப்படையாக பேசாமல் இருக்க, அவருக்கு பெரும் தொகை
அளிக்க டிரம்ப் திட்டமிட்டதாக கூறினார். டிரம்ப் முன்னிலையில் அவரின் நிதி ஆலோசகர் ஆலென் வெய்ஸல்பர்க், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளிக்கும்படி தன்னிடம் கூறியதாக சாட்சியம் அளித்தார். அந்த தொகையை தவணை முறையில், சட்ட ஆலோசனைக்கான கட்டணம் என்ற பெயரில் டிரம்ப் தனக்கு திருப்பி அளித்தாக கூறியுள்ளார்.