சாட்டையை சுழற்றிய பைடன் - "சீரழித்தவர்..."டிரம்பிற்கு எதிராக கொதித்த அதிபர்

x

அடுத்த வாரம் முதல் தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குடியரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் முன்னாள் அதிபரும், வேட்பாளருமான டிரம்ப்பின் பேச்சை சுட்டிக்காட்டிய பைடன், தனிப்பட்ட விஷயங்கள் குறித்தே டிரம்ப் பேசியதாகவும், அமெரிக்கர்களின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் இல்லை... இருண்ட பார்வை கொண்டதாக இருந்ததாக குற்றம் சாட்டினார். டிரம்ப்பின் சர்வாதிகார ஆட்சியையும், நாட்டின் பொருளாதாரத்தை அவர் சீரழித்ததையும் அமெரிக்கர்கள் இன்னமும் மறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், தேர்தலில் டிரம்ப்பை நிச்சயம் வீழ்த்த முடியும் என்றும் பைடன் உறுதிபடத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்