திக்குமுக்காட வைத்த ஹமாஸ் ராக்கெட்கள் - மீண்டும் ருத்ர தாண்டவமாடிய இஸ்ரேல் படைபோரின் உச்சம்..

x

கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் போரில் இதுவரை 35 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், ஆயிரத்து 500 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள ராஃபா நகரில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் நிர்வாகத் தலைநகரான டெல் அவிவ் மீது ராக்கெட் தாக்குதலை மேற்கொண்டனர். கடந்த நான்கு மாதத்தில், டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட முதல் ராக்கெட் தாக்குதல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ராஃபா நகரில் உள்ள ஹமாஸ் தளத்தின் மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுகளை

வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களான யாசின் ராபியா மற்றும் கலீத் நகர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம்

கூறியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, காசா பகுதியின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்