ரஷ்யாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - அடுத்த சிலநொடிகளில் இந்தியதூதரகம் சொன்ன தகவல்

x

ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், விமானப் பயணிகளுக்கு உதவுவதற்காக, அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்பாளர்கள் கொண்ட தூதரக குழு, க்ராஸ்னோயர்ஸ்க்-கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்