உலகையே அதிர வைத்த கைது... அதிர்ச்சியில் உறைய வைத்த Telegram CEO பின்னணி..! - ஷாக்கில் இந்தியர்கள்...

x

தனி விமானம் மூலம் பிரான்ஸ் வந்திறங்கிய டெலிகிராம் செயலியின் சிஇஓ-வை பிரான்ஸ் காவல்துறை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்திருக்கிறது. உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி, பேசு பொருளாகி இருக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...


இணையவழி மோசடி கும்பலின் களமாகவே கிட்டதட்ட டெலிகிராம் பார்க்கப்பட்டு வந்தது...

சட்ட விரோதமாக கருதப்பட்ட அனைத்து வில்லங்கங்களையும், தன் பயணர்களுக்கு மிகவும் எளிதாகவே டெலிகிராம் சாத்தியப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது...

இந்நிலையில்தான் பிரான்ஸ் விமான நிலையத்தில் வைத்து, டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவை பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.....

அதுவும் பரபரப்பு குற்றச்சாட்டுடன்...

டெலிகிராம் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை பாவெல் துரோ முறையாக கவனிக்கவில்லையாம்...

அதோடு இல்லாமல், பிரான்ஸில்... தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், சிறார் பாலியல் வீடியோ உள்ளிட்டவற்றை எந்த ஒரு தடையுமில்லாமல் டெலிகிராம் செயலி அனுமதித்ததாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்...

மேலும், மேற்சொன்ன அனைத்து குற்றச் செயல்களுக்கும் பாவெல் துரோ ஆதரவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது..

இப்படி குற்றவியல் நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்காமல் விட்டதுடன், போதைப்பொருள் கடத்தல், ஆபாச பதிவுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் அவரை வாரண்ட்டுடன் கைது செய்திருக்கிறது பிரான்ஸ் போலீஸ்...

இவ்வாறு பிரான்ஸ் நாட்டின் சட்டத்தை மீறி செயல்பட்டதற்கு, பாவெல் துரோவிற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது...

உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்களை டெலிகிராம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது..

இந்த பயனர்கள் பட்டியலில், டெலிகிராம் செயலியை அதிகம் பயன்படுத்தும் பயனர்களில் இந்தியா முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்க நிலையில், டெலிகிராம் சிஇஓ மீதான இந்த கைது நடவடிக்கை இந்தியர்களை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்