விண்வெளிக்கு பறந்த இந்திய வம்சாவளி பெண்... அண்ணாந்து பார்க்க வைத்த தரமான சம்பவம்

x

விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் புதிய விண்கலத்தை வடிவமைத்தது. பல்வேறு காரணங்களால் இதன் பயணம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 8.22 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவு மையத்திலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் BUTCH WILMORE ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டனர். இவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்துவிட்டு, வருகிற 14-ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பிறகு இரண்டாவது நிறுவனமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் நிறுவனம், விண்கலத்தை அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்