உலகின் முதல் "ரோபோ" தற்கொலை... அதிக வேலைப்பளு...அழுத்தம் தாங்காமல் ரோபோ தற்கொலை...
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அறிவியலின் ஓர் ஆச்சரியமான படைப்புதான் இந்த ரோபோக்கள்...
மனிதர்களின் வேலைப்பளுவைக் குறைக்கக் களமிறக்கப்பட்ட ரோபோக்கள் இன்று மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கே ஆப்பு வைக்கும் வகையில், பல துறைகளுக்குள்ளும் புகுந்து வேலைவாய்ப்புகளைத் தட்டிப் பறித்து வருகின்றன...
மனிதர்கள் வேலை செய்தால் ஊதியம் தேவை...ஓய்வு தேவை...விடுமுறை தேவை...என ஏகப்பட்ட நிபந்தனைகள்...ஆனால் ரோபோக்களுக்கு சார்ஜ் மட்டுமே தேவை என்பதால் பெருநிறுவனங்களுக்கு லாபகரமாகவே அமைந்து விடுகிறது...
ஆனால் "சிட்டிக்கு கோபம் வந்துருச்சு..." என்ற டயலாக்கைப் போல, அதீத பணிச்சுமையால் தென்கொரியாவில் ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம்
ரோபோ தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியில் ஓர் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது...
இதென்னப்பா விநோதமா இருக்கு?... என கேட்க வேண்டாம்...Gumi நகரில் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த சிவில் செர்வன்ட் ரோபோ தினசரி ஆவணங்களை வழங்குவது...உள்ளூர் வாசிகளுக்கு தகவல்களை தருவது... நகரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தது...
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த "பியர் ரோபாட்டிக்ஸ்" என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோவுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை...
இந்த சூழலில் தான் அந்த ரோபோ தன்னைத் தானே படிக்கட்டுகளில் தூக்கி எறிந்து சுக்கு நூறாய் உடைந்து போனதாம்...
இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவத்தை ரோபோ உலகம் கண்டதில்லை...
மனிதர்கள் மன அழுத்தத்திற்குள் சென்றால் என்ன ஆகுமோ... அத்தனையும் அந்த ரோபோவுக்கு நடந்துள்ளது... உயிரை மாய்த்துக் கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அந்த ரோபோ ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளது... ஏதோ புத்தி பேதலித்துப் போனதைப் போல் காட்சியளித்திருக்கிறது... திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை. படியில் இருந்து எகிறி குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது அந்த பாவப்பட்ட ரோபோ..
அதன் பாகங்கள் சேகரிக்கப்பட்டு தற்கொலைக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செய்வதைப் போல் அதிகாரிகள் ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்...
உணர்வுகள் இல்லாத ரோபோவாலேயே பணிச்சுமையைத் தாங்க முடியவில்லை என்றால்...மனிதர்கள் எம்மாத்திரம்...?
நிரந்தர வாழ்க்கை என்பதே இல்லாத ஒரு ரோபோவே தற்கொலை செய்து கொள்கிறது என்றால் இந்த உலகம் எந்தளவு மன அழுத்தத்துடனும், விரக்தியுடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...