ஈராக் அரசியலில் திடீர் மாற்றம்
ஈராக் அரசியலில் திடீர் மாற்றம்
ஈராக் நாட்டின் புதிய அதிபராக அப்துல் லத்தீப் ரஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈராக்கில் கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவி வந்தது.
ஈராக்கின் தற்காலிக அதிபராக பர்ஹாம் சலே செயல்பட்டு வந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.
இதில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் ரஷீத், ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story