உலகத்தையே கண்காணிக்கும் அதி நவீனம் - "விதிகளை மீறியதா வட கொரியா?"
வட கொரியா கடந்த 21ம் தேதி தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது... ஐநா தீர்மானங்களை மீறியதாக வடகொரியாவுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன... இந்த செயற்கைக்கோள் வட கொரிய ராணுவத்தை உலகின் தலை சிறந்த ராணுவமாக மாற்றும் என்று வடகொரிய பிரதமர் கிம் டோக் ஹன் தெரிவித்திருந்தார்... இது தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என்று வடகொரியத் தலைவர் கிம் உறுதிபட தெரிவித்தார்... அந்த வகையில், இத்திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாராட்டுவதற்காக விழா நடைபெற்றது... கிம் அதில் பங்கேற்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்..
Next Story