"இலங்கைக்கு மீண்டும் அதே கதி ஏற்படும்" - மறைமுக எச்சரிக்கை..?
எதிர்வரும் அதிபர் தேர்தல் முடிவுகள் நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே தவிர அது தனிப்பட்ட வெற்றி தோல்வியாக அமையாது என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சீர்திருத்த குழுவில் இடம்பெற்றுள்ள இளைஞர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலமே நாட்டை முன்னேற்றி கொண்டு செல்ல முடியும் என கூறியுள்ள ரணில், அதனை செய்யாவிட்டால் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருளுக்காக பொதுமக்கள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
Next Story