ஹசீனாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் ஏன்? 19 ஆயிரம் இந்தியர்களின் நிலை..? ஜெய்சங்கர் பரபரப்பு விளக்கம்

x

மிக குறுகிய நேரத்தில் ஹசீனா இந்தியா வருவதற்கு அனுமதி அளித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

வங்கதேச உள்நாட்டு கிளர்ச்சி காரணமாக, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தநிலையில் வங்கதேச சூழல் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் விளக்கம் அளித்தார். ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வருவது தொடர்பான கோரிக்கை மிகக் குறுகிய நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விமானத்திற்கு அனுமதியளிக்கவும் வங்கதேச விமானப்படை கோரிக்கையை விடுத்திருந்தது. அனுமதியளித்ததும் நேற்று மாலை ஹசீனா டெல்லிக்கு வந்தடைந்தார் என்றார். வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெய்சங்கர், பெரும்பாலான மாணவர்கள் ஜூலையிலே இந்தியா திரும்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள், அதீத எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். வங்கதேச இடைக்கால அரசு இந்திய தூதரகங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும், வங்க தேச அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டவர், இந்தியாவும், வங்க தேசமும் நீண்ட காலமாக நட்பு நாடுகள், புதிய அரசுடனும் நட்பு தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்