கொரோனா முடக்கம் நீக்கம் வேலை இழந்து மக்கள் தவிப்பு

2 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பொதுமுடக்கம் நீக்கம் வேலை இழந்து தவிப்பதாக பொதுமக்கள் வேதனை
x

சினாவின் ஷாங்காய் நகரில் 2 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பொதுமுடக்கம் நீக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்த‌தால், பல்வேறு நாடுகள் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கின. ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் பொதுமுடக்கம் நீக்கப்பட்டுள்ளது. இதனால், ஷாங்காய் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதே நேரத்தில், 2 மாதங்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்த‌தாகவும், வேலை இழந்து த‌விப்பதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்