உக்ரைனுக்கு உதவியா..? புதின் சொன்ன ஒற்றை வார்த்தை.. நடுக்கத்தில் உலக நாடுகள் | Russia Ukraine War

x

உக்ரைன் விவகாரத்தில் மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய புதின், ரஷ்யாவின் அணுசக்திக் கோட்பாட்டை மாற்ற முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்...

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் தெளிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள புதின்,

ரஷ்யா, பெலாரசுக்கு எதிராக ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுத தாக்குதலை ரஷ்யா நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

அணு ஆயுத சக்தி அல்லாத நாடுகள், அணு ஆயுதங்கள் உள்ள நாடுகளுடன் கைகோர்த்து ரஷ்யா மீது தாக்குதலை நடத்தினால், அது ரஷ்ய கூட்டமைப்பின் மீதான அவர்களின் கூட்டுத் தாக்குதலாகக் கருதப்படும் எனவும் புதின் எச்சரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்