ரஷ்யாவின் கொலைவெறி தாக்குதல்.. உடனே பைடனுக்கு போன் போட்ட ஜெலன்ஸ்கி.. அடுத்த நடந்த தரமான சம்பவம்..!
ரஷ்யாவின் கொலைவெறி தாக்குதல்.. உடனே பைடனுக்கு போன் போட்ட ஜெலன்ஸ்கி.. அடுத்த நடந்த தரமான சம்பவம்..!
தீவிரப்படுத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலை அடுத்து, மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களில் ரஷ்யா ஏவுகணைகளை பொழிந்ததையடுத்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பைடன், மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட அனைத்து உதவிகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு உறுதியளித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பைடனுடனான உரையாடலுக்குப் பிறகு, "தங்கள் பாதுகாப்பு தேவைகளில் தற்போது வான் பாதுகாப்பு முதலிடத்தில் உள்ளதாக" ஜெலென்ஸ்கி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story